27-ம் தேதிக்குப் பிறகு மின்வெட்டு குறையும்-மின்வாரியம்
சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு குறையும் வகையில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் 3 மணி நேர மின்வெட்டும் சென்னையில் 1 மணி நேர மின்வெட்டும் நிலவி வருவதாகவும் இதை ரத்து செய்ய தேவையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறியிருந்தார்.
மின்வெட்டை போக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் இருமுறை விவாதித்தார்.
மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பற்றாக்குறை மின்சாரத்தை உற்பத்தி செய்ய எடுத்து வரும் நட வடிக்கைகளை அப்போது முதல்வரிடம் விளக்கி கூறினார்.
உடனே ஜெயலலிதா தமிழ்நாட்டில் 3 மாதத்திற்குள் மின் சப்ளை சீராக வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதையொட்டி மின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகிறது. 3 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது காற்றாலை மூலம் காலையில் 840 மெகாவாட் மின்சாரமும், மாலையில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் கிடைக்கிறது.
சராசரியாக 1,800 மெகாவாட் மின்சாரம் தினமும் கிடைக்கிறது. 27-ந் தேதிக்கு பிறகு மேலும் மின் உற்பத்தி அதிகரித்து விடும்.
எனவே 27-ந்தேதிக்கு பிறகு மின்வெட்டு குறைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாகக் குறையும். சென்னையிலும் மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது," என்றார்.
மேலும் மே இறுதிக்குப் பிறகு கோடை மழை பெய்யத் தொடங்கிவிடும் என்பதால் மின் உற்பத்தி மேலும் சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications