நார்வேயில் கைதான எல்டிடிஇ தலைவர் நெடியவனை ஒப்படைக்கக் கோரும் இலங்கை
கொழும்பு: நார்வே நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான நெடியவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளது இலங்கை.
கடந்த 20ம் தேதி நார்வேயில் கைது செய்யப்பட்டார் நெடியவன். இவர் நார்வே நாட்டில்தான் வசித்து வருகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி வசூலித்ததாக கூறி அவரைக் கைது செய்துள்ளது நார்வே.
நெடியவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நெடியவன் கைது குறித்த விவரத்தைத் தர வேண்டும், அவரை எங்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது இலங்கை.
இலங்கையால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் நெடியவன் பெயரும் இருப்பதாக அந்த நாடு கூறியுள்ளதாம்.
ஆனால் ஈழப் போரின்போது மிகக் கொடூரமான போர்க்குற்றத்தில் ஈடுபட்டு, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகள் இயக்கத் தலைவர்களை மிகக் கொடூரமாக, காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்த, ஐநா. குழுவால் போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையிடம் நெடியவனை நார்வே ஒப்படைக்குமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications