கோவை மாவட்டத்தில் குற்றங்கள் குறைக்கப்படும்: புதிய எஸ்.பி. உமா உறுதி
கோவை: கோவை மாவட்டத்தில் குற்றங்கள் குறைக்கப்படும் என நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.பி. உமா தெரிவித்தார்.
புதிய எஸ்.பி.
கோவை மாவட்ட எஸ்.பி.-ஆக இருந்த கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக கோவை மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் உமா நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
உமா, கடந்த 1999-ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சியில் பணியை துவக்கினார். பின்னர் தஞ்சை, தாராபுரம் பகுதிகளில் டி.எஸ்.பி. ஆகவும், நெல்லை மாநகரில் ஏ.டி.எஸ்.பி.ஆகவும், கோவை மாநகர துணை கமிஷனராகவும் (தலைமையகம்), சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.
இரண்டாவது பெண் எஸ்.பி.
இவர் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டாவது பெண் எஸ்.பி. ஆவார்.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து உமா கூறியதாவது,
இன்னும் சில நாட்களில் மாவட்டத்தில் உள்ள 33 காவல் நிலையங்களிலும், சப் - டிவிஷன் டி.எஸ்.பி. அலுவலகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றங்கள் குறைக்கப்படும். ரூரல் காவல் நிலையங்களில் போலீஸ் பற்றாக்குறை உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
சூலூர் சப்-டிவிஷன்
சூலூர் சப்-டிவிஷனை மீண்டும் துவக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பினைக் கருத்தில் கொண்டு, சூலூர் சப்-டிவிஷனை விரைவில் துவக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications