காரில் வைத்து அதிகாரி எரித்துக் கொலை-டிரைவர் கைது-3 பேருக்கு வலை
சென்னை: ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை அடித்துக்கொலை செய்து விட்டு பின்னர் உடலை காரில் வைத்து தீவைத்து எரித்த வழக்கில் கார் டிரைவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்ட 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
60 வயதான மாசிலாமணி, குடிசை மாற்று வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
அவரிடம் டிரைவராக இருந்தவர் சுரேஷ். இவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் மாசிலாமணியிடம் பணியில் சேர்ந்தார். சிலநாட்களுக்கு முன்பு சுரேஷுடன் காரில் சென்ற மாசிலாமணியைக் காணவில்லை. சுரேஷையும் காணவில்லை. இந்த நிலையில் கிண்டி தொழிற்பேட்டைப் பகுதியில் மாசிலாமணியின் கார் எரிந்த நிலையிலும், அதில் மாசிலாமணியின் கருகிப் போன உடலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுரேஷ்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்தது. இதையடுத்து அவரைத் தேடி வந்தனர். இதில் அவர் திருச்செந்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான பேயன்விளையில்வைத்து போலீஸாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது உண்மையைக் கக்கினார் சுரேஷ். இதுகுறித்து சுரேஷ் போலீஸாரிடம் கூறுகையில்,மாசிலாமணி கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் எப்போதும் பெரும் பணத்துடன் இருப்பார்.
காரில் பணத்துடன் எப்போதும் செல்வதால் அதைப் பார்த்த நான் பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதை எனது கூட்டாளிகள் 3 பேரிடம் சொன்னேன். அவர்களும் சம்மதித்தனர்.
சம்பவத்தன்று காரில் சென்ற போது வழியில் எனது கூட்டாளிகளை ஏற்றிக் கொண்டேன். காரில் ஏறிக் கொண்ட மூன்று பேரும் மாசிலாமணியிடம் பணத்தைப் பறிக்க முயன்றனர். ஆனால் அன்று பார்த்து அவர் பணத்தைக் கொண்டு வரவில்லை. இதையடுத்து வீட்டில் இருக்கும் பணத்தைக் கேட்டு மிரட்டி சரமாரியாக அடித்தோம். அதில் மாசிலாமணி இறந்து விட்டார்.
இதையடுத்தி கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் காரை கொண்டு வந்து நிறுத்தி அதற்கு தீவைத்து விட்டுத்தப்பி விட்டோம் என்று கூறியுள்ளார் சுரேஷ்.
சுரேஷின் கூட்டாளிகள் மூன்று பேரையும் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications