ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: எரிமலை சாம்பல் பரவியதால் 252 விமானங்கள் ரத்து
ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து எரிமலை வெடித்து, அதன் சாம்பல் காற்றில் அடர்த்தியாக பரவியதால் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பறக்கும் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஒரு எரிமலை வெடித்தது நினைவிருக்கலாம். அதன் சாம்பல் காற்றில் பரவியதில் விமான என்ஜினுக்குள் சாம்பல் புகுந்து விமான விபத்து ஏற்படும் என்பதால் ஒரு லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு கோடி விமானப் பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். இதனால் விமானப் போக்குவரத்து தொழில் பெரும் பாதிப்பை அடைந்தது. விமான கம்பெனிகளுக்கு 170 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது.
சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இதே போன்ற எரிமலை வெடிப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தில் உள்ள கிரிம்ஸ்வோட்டின் என்ற எரிமலை இப்போது வெடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு இது என்று அந்த நாட்டின் அதிபர் ஓலாபர் கிரிம்சன் தெரிவித்துள்ளார்.
இந்த எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு பரவி வருகிறது. இதனால் விமானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த தகவலை ஐரோப்பிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் பிரையன் பிளைன் தெரிவித்தார்.
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எரிமலை சாம்பல் காற்றில் கலந்ததால் தன் பயணத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரான்சிலும் பாதிப்பு
எரிமலை சாம்பல் காற்றில் கலந்து அந்த காற்று பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால் அந்த நாடுகளிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளிலும் இந்த காற்று பரவும் என்று தெரிகிறது.
ஐஸ்லாந்து நாட்டின் முக்கிய சர்வசேத விமான நிலையமான கெப்ளாவிக் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. ஐஸ்லாந்து முழுவதும் எரிமலை சாம்பல் துகள்கள் பரவியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications