ஜெயலலிதாவுடன் கிருஸ்தவ பிஷப்புகள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலவர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் கிருஸ்தவ பிஷப்புகள் சந்தித்து அவருக்காக விசேஷ பிரார்த்தனை நடத்தினர்.

ஜெயலலிதாவை தென்னிந்திய திருச்சபையின் தலைமை பிரதமப் பேராயர் வசந்தகுமார் தலைமையில் திருச்சபையின் பேராயர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தங்களது வாழ்த்துகளையும், ஆசிகளையும் வழங்கினர்.

தென்னிந்திய திருச்சபை சார்பில் தமிழ்நாட்டில் 8 பேராயர்கள் இருப்பதாகவும், அதில் 21 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும், இவர்களின் நல்லாதரவும், ஒத்துழைப்பும் ஜெயலலிதாவுக்கு தொடரும் என்றும் உறுதியளித்தனர்.

சிறுபான்மை சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளையும் ஜெயலலிதா தீர்த்து வைப்பார் என்பதில் தாங்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சந்திப்பின் முடிவில் ஜெயலலிதாவுக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடத்தினர். அவர்களது நல்வாழ்த்துகளுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+