திருச்சியில் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் இலவச தொழிற் பயிற்சி
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுயவேலைவாய்ப்பு பயிற்சி மூலம் 2010 - 2011 ம் ஆண்டு தாட்கோ மூலம் சுயவேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 55 இந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவ இளைஞருக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது.
இதில், சி.எஸ்.சி.கம்ப்யூட்டர் எஜூகேஷன் மூலம் திருவெறும்பூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகில் ஒன்பது வகையான பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர்வதற்கு ப்ளஸ் 2 தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சியின் போது, பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ 400 ரூபாய் வழங்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள இளைஞர்கள் மேற்கண்ட பயிற்சியில் சேர, மாவட்ட மேலாளர், தாட்கோ, கலெக்டர் அலுவலகம் ரோடு, ராஜா காலனி, திருச்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications