சிறையில் கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு: டாடா நிறுவனத்திலிருந்து விலகிய திமுக பிரமுகர்கள்
டெல்லி: திகார் சிறையில் உள்ள திமுக எம்பியும் தனது தங்கையுமான கனிமொழியை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பு 5.15 முதல் 6 மணி வரை நடந்தது. அப்போது மத்திய இணையமைச்சர் நெப்போலியனும் உடனிருந்தார்.
கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் டெல்லி வந்துள்ளார்.
இதற்கிடையே கனிமொழியிடம் விசாரணை நடத்த அனுமதிக்ககுமாறு அமலாக்கப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாடா நிறுவனத்திலிருந்து விலகிய திமுக பிரமுகர்கள்:
இதற்கிடையே டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவன இயக்குனர் குழுவிலிருந்து திமுக அமைப்புச் செயலாளரான பெ.வீ.கல்யாணசுந்தரம் விலகியுள்ளார்.
தி.மு.கவைச் கல்யாணசுந்தரம், வி.ஆர்.எஸ்.சம்பத்தும் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவன இயக்குனர்களாக அரசால் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அவர்களது நியமனத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கடந்த மாதம் 7ம் தேதி டாடா நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை கடிதம் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அதே போல சம்பத்தும் விலகிவிட்டதாகத் தெரிகிறது. இந்த இருவருமே வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தார்த் பெகுரா ஜாமீன் மனு-தீர்ப்பு ஜூன் 3க்கு ஒத்திவைப்பு:
இதற்கிடையே 2ஜி முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஜூன் 3ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி ஒத்தி வைத்துள்ளார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications