கோவை சிறையில் கைதிகளும் சிறைக்காவலர்களும் மோதல்
கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது.
பிரச்சனை
கோவை சிறையின் 'டவர் பிளாக்" பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தன்னை வேறு அறைக்கு மாற்றும்படி அருகிலிருந்த காவலரிடம் கேட்டுள்ளார். சிறை நிர்வாகிகளின் அனுமதியின்றி கைதி அறையை மாற்ற முடியாது என காவலர் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கைதி சிறைக்காவலர்களை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். இதனால், இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
கைதிகள் போராட்டம்
காவலர்கள் சம்பந்தப்பட்ட கைதியை தனி அறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி அடித்ததாக சக கைதிகள் மத்தியில் பரவியது. இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை
கைதிகள் உணவைப் புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால், கைதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய சிறை அதிகாரிகள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கைதிகளிடம் உறுதியளித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications