டெல்லி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
டெல்லி: தெற்கு டெல்லியில் கார்கி கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனம் மற்றும் இரு பென்சில் பேட்டரிகள் கிடந்ததால் பரபரப்பு நிலவுகிறது.
5 நாட்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந் நிலையில் இன்று கார்கி கல்லூரியில் வெடி பொருட்கள் கிடந்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கேல்காவ்ன் மார்க் அருகே உள்ள இந்தக் கல்லூரியின் பஸ் ஸ்டாப் அருகே மர்ம பார்சல் கிடந்தது. இதையடுத்து பீதியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அதை சோதனையிட்டபோது வெடி பொருட்கள், வயர்கள், பென்சில் பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது.
பீதியை உண்டாக்கும் நோக்கத்தில் இந்த வெடி பொருளை சில போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
டெல்லியில் ஒரே வாரத்தில் இரண்டு இடங்களில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications