போலீசாக நடித்து நகைப்பட்டறையில் 1 கிலோ தங்கத்தை திருடியவர்களில் 3 பேர் கைது
கோவை: போலீசார் போல நடித்து நகைப்பட்டறை ஊழியர்களை தாக்கி 1 கிலோ தங்கத்தை திருடிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 271 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாக நடித்து கொள்ளை
கோவை வைசியாள் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் நகை பட்டறை நடத்தி வருபவர் திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. சம்பவத்தன்று இரவு பட்டறையில் கிருஷ்ணமூர்த்தியின் தம்பி தினேஷ்குமார் உள்ளிட்ட ஊழியர்கள் 6 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4.45 மணியளவில் அறையின் கதவு தட்டப்பட்டுள்ளது. 'போலீஸ் வந்திருக்கிறோம், கதவை திறங்கடா" என மிரட்டும் தொனியில் குரல் கேட்டது. பயந்துபோன ஊழியர்கள் கதவை திறந்தனர். போலீசார் அணியும் ஷூ, போலீசாரைப் போலவே அட்டாக் கட்டிங் சிகை அலங்காரம் ஆகியவை வந்தவர்கள் மஃப்டி போலீசார் என நம்பும்படி இருந்தது. வந்தவர்கள் தங்களை சென்னை க்ரைம் பிராஞ்ச் போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டனர். பின்னர், “கிருஷ்ணமூர்த்தி எங்கே?; கொள்ளையடித்த நகைகளை எங்கே ஒளித்து வைத்துள்ளீர்கள்?" என கேட்டவாறே ஊழியர்களை கடுமையாகத் தாக்கினர். தினேஷ்குமார் மற்றும் ஊழியர்களை ஒரு அறையில் தள்ளி கட்டிப்போட்டனர். பின்னர், அங்கிருந்த நகைகள் மற்றும் நகை செய்வதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 கிலோ தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
சந்தேகம்
மேற்படி கொள்ளை சம்பவத்தை துணை ஆணையர் காமினி மேற்பார்வையில் உதவி ஆணையர் முருகசாமி, இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியாரைக் கொண்ட தனிப்படை விசாரித்து வந்தது. விசாரணையில் கடையில் ஊழியர்களாகப் பணியாற்றி வந்த பாபு, மணிகண்டன் ஆகியோர் மீது சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணையில் அவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் பட்டறையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே இதைப் போல போலீசார் எனக்கூறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது
இதைத் தொடர்ந்து செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, பாபு, மணிகண்டன் ஆகியோரை காவல்துறை கைது செய்தது. அவர்களிடமிருந்து 271 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இக்குற்ற செயலில் ஈடுபட்ட இன்னும் நால்வரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications