இலங்கையை இந்தியாவிடம் அடகு வைத்து விட்டார் பெரீஸ்-சிங்கள பிக்குகள் போர்க்கொடி
கொழும்பு: இந்தியாவிடம், இலங்கையை அடகு வைத்து விட்டார் வெளியுறவு அமைச்சர் பெரீஸ். இந்தியாவுடன் அவர் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று சிங்கள, தேசிய பிக்குகள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையை இந்தியாவுக்கு காட்டிக் கொடுத்து விட்டார் பெரீஸ் என்றும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தேசிய பிக்குகள் முன்னணியின்த லைவர் ஹந்துகலா ரத்னபாலா தேரோ. அப்போது அவர் கூறுகையில், இலங்கையை தற்போது தன் பாதைக்குத் திருப்பி ஆதிக்கம் செலுத்த இந்தியா முயலுக்கிறது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை அது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
பெரீஸ் சமீபத்தில் இந்தியா சென்றபோது இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை இதை நிரூபிப்பதாக உள்ளது.
இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதில் தவறில்லை என்ற போதிலும் அடிமையாகிச் செயல்பட முடியாது. 13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்தல், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், மனித உரிமை மீறல் விசாரணை என பல்வேறு வழிகளில் இந்தியா, இலங்கை மீது நெருக்கடிகளை திணித்து வருகிறது.
விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கையை மீட்ட பின்னர் இப்போது சிலர் போர் வெற்றியை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications