ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 7 லட்சத்தை திருடிய இளைஞர் கைது
வேலூர்: வேலூர் அருகே ஏடிஎம் மையத்தில் ரூ. 7 லட்சத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் அருகே சங்கரன்பாளையத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இதை வங்கி அதிகாரிகள் சரி செய்த போது அதில் ரூ. 7 லட்சம் இருப்பு குறைவாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தனியார் பாதுகாப்பு நிறுவன அலுவலர் சுதாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பும் பணியில் இருந்த மகேந்திரன் என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த 28-ம் தேதி ஏடிஎம் மையத்துக்கு சென்ற மகேந்திரன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் ஒயரை துண்டித்துள்ளார்.
பின்பு அங்கு மறைவாக வைத்திருந்த சாவி மூலம் இயந்திரத்தை திறந்துள்ளார். மும்பையில் உள்ள ஏடிஎம் இயந்திர பாதுகாப்பு பெட்டகக் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து அவர் ஏற்கெனவே பயன்படுத்திய ரகசிய எண்ணை கூறி ஏடிஎம் இயந்திரத்தின் லாக்கரை திறக்கும் பாஸ்வேர்டு பெற்று திறந்துள்ளார். லாக்கரில் இருந்து ரூ. 7 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.
மேலும், இது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications