தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை: பிரமாண்ட கப்பல் வருகை

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க வேண்டும் என 10 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கான தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.76 கோடி மதிப்பில் பயணிகள் முனைமம் அமைக்கப்பட்டது.
இதில் சுங்கசோதனை, குடியுரி்மை சோதனை, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான வசதிகளுடன், உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவியும் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பலை இயக்குவதற்கான உரிமையை பிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் சொகுசு கப்பலை தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு இயக்க ஓப்பந்தம் செய்துள்ளது. இந்த சொகுசு கப்பல் தற்போது தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது.
பிரமண்டமான இந்த சொகுசு கப்பலில் 1050 பேர் பயணிக்க முடியும். தொழில் நுட்ப பணியாளர்கள் 50 பேரும், உபசரிப்பு பணியாளர்கள் 150 பேரும் இதில் பணியாற்றுகின்றனர். இதில் பயணிகளுக்கு 322 அறைகளும், பணி்யாளர்களுக்கு 98 அறைகளும் உள்ளன. 322 பேர் அமரக்கூடிய ஹோட்டல், 76 பயணிகள் அமரக்கூடிய காப்பி ஷாப், 253 பேர் அமர கூடிய பார்வையாளர் மடம் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் மதுபான அரங்கு, காசினோ எனப்படும் பொழுதுபோக்கு மையம், பரிசுபொருள் அங்காடி, சுங்கவரி விலக்கு அங்காடி, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஆகியவை உள்ளன. சுமார் 200 கார்கள் கொண்டு செல்வதற்கான இடவசதி கொண்ட இந்த கப்பலில் சுமார் 2 ஆயிரம் டன் சரக்கையும் கொண்டு செல்ல முடியும்.
மணிக்கு சுமார் 13 கடல் மைல் முதல் 18 கடல் மைல் வேகத்தி்ல் இந்த கப்பலில் பயணிக்க முடியும். காற்றின் வேகம் மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு சுமார் 9 மணி முதல் 12 மணி நேரத்தில் செல்ல முடியும். தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications