வசீரிஸ்தானில் தாக்குதல் நடத்தி முல்லா ஒமர், காஷ்மீரியை அழிக்க பாக்.குக்கு அமெரிக்கா கெடு
வாஷிங்டன்: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பழங்குடியினப் பகுதியான வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ள தாலீபான் தீவிரவாதிகளை ஜூலைக்குள் பிடிக்க வேண்டும் என்று அமெரிக்க கெடு விதித்துள்ளது.
தலிபான் தலைவர் முல்லா ஒமர் மற்றும் அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரி ஆகியோரையும் ஜூலைக்குள் ஒழிகக் வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
தேடப்படும் தீவிரவாதிகள்
ஒசாமா பில்லேடன் கடந்த மாதம் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டப் பிறகு அங்கு பதுங்கியுள்ள 5 தீவிரவாதிகளை பிடித்து தருமாறு ஒரு பட்டியலை பாகிஸ்தானிடம் அமெரிக்கா கொடுத்து இருந்தது.
அதில் தாலிபான் தலைவர் முல்லா உமர், அல்கொய்தா இயக்கத் துணைத்தலைவர் அல் ஜவாஹிரி, இலியாஸ் காஷ்மீரி, சிராஜூதின் ஹக்கானி மற்றும் அல்கொய்தாவின் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் வடக்கு வசீரிஸ்தானில் இந்த தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதால் அந்த பகுதியில் தாக்குதலை தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் வடக்கு வசீரிஸ்தானில் தாக்குதலை நடத்த சம்மதித்தது.
அமெரிக்கா கெடு
இருப்பினும் வசீரிஸ்தானில் ஹக்கானியின் தீவிரவாத குழுதான் செல்வாக்குடன் உள்ளது. இது பாகிஸ்தானுக்கு எப்போதும் ஆபத்தாக இருந்தததில்லை என்பதால் அங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருகிறது.
இதனை அறிந்த அமெரிக்கா வடக்கு வசீரிஸ்தானில் ஜூலை மாதத்திற்குள் தாக்குதலை தொடங்கவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு கெடு விதித்துள்ளது.
இது தொடர்பாக இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அமெரிக்க அதிகாரிகள் எல்லையில் சந்தோஷமாக வசித்து வரும் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications