விஜயலட்சுமி.. நான் செய்த மிகப் பெரிய தவறு-சீமான்

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை களங்கப்படுத்தும் உள்நோக்கத்தோடு திட்டமிட்ட செயல்கள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகின்றன.
பொய்ப்புகார் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு வழக்கினை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.
கடந்த மூன்றாண்டுகளாக பல மாதங்கள் சிறைப்பட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர் நலனுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டும், மக்களிடமிருந்தும்,இயக்கத்தினரிடமிருந்தும் எள்ள்ளவும் பிரியாது தொண்டாற்றும் எமது கட்சியின் தலைவரை இனநலனுக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் சிலரது தூண்டுதலின் பேரிலே இந்த பொய்ப்புகார் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது
மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு போன்றவற்றின் மூலம் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்ட சில காட்சி ஊடகங்கள் சீமான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு எமது பெயருக்கு களங்கம் விளைக்க முயல்கின்றனர்.
சீமான் அவர்கள் எங்கும் தலைமறைவாகவில்லை என்பதை தெரிவிப்பதோடு. அவர் எவ்வித விசாரணைக்கும் தயாராகவே உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தைஎள்ளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி பொய் சொல்கிறார்-சீமான் பேட்டி:
இதற்கிடையே சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று அழுதார்.
நான் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ்கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று தகவல் வரும்.
என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று கூட ஒருமுறை மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. இதை எனது நண்பரான டைரக்டர் சேரனை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தேன். விஜயலட்சுமி மீது போலீசில் புகார் கொடுக்கலாமா என்று அவரிடம் ஆலோசனை கேட்டேன். வேண்டாம் என்றும், விஜயலட்சுமியை கண்டிப்பதாகவும் சேரன் கூறினார்.
அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி விட்டேன். திமுக, காங்கிரசை எதிர்த்து கூட்டங்களில் பேசினேன். தேர்தலில் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்போது நடிகை விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர்.
விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் என் மீது போடப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன். அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை நிரூபிப்போம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications