ஓரே பதிவு எண்கள்; இரண்டு கார்கள்; கோவையை கலக்கிய ஸ்கார்பியோ!
கோவை: உள்ளூர் பிரமுகரின் கார் எண்ணைப் போலவே ஓரே பதிவு எண்களில் வலம் வந்த காரை போலீசார் அமுக்கியுள்ளனர்.
பிரமுகர்
கோவை ம.தி.மு.க., பிரமுகர் ஆனந்தன். இவர் தடாகம் ரோட்டில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது ஸ்கார்பியோ காரின் எண் டி.என். 38 ஏ.எம்.2353 ஆகும். இந்நிலையில் ஆனந்தனின் கார் பதிவு எண்ணையே கொண்ட மற்றொரு ஸ்கார்பியோ கார் கோவையின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதை ஆனந்தனின் நண்பர்கள் கண்டுள்ளார்கள்.
தேடுதல்
தன்னுடைய காரின் அதே எண்ணைக் கொண்ட காரை ஆனந்தன் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ஒரு அலுவலகத்தின் முன்பு அந்த கார் நின்று கொண்டிருப்பதாக ஆனந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனே காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
பறிமுதல்
ஆனந்தனின் புகாரின் அடிப்படையில், காரை பறிமுதல் செய்த போலீசார், காரின் ஆவணங்களைச் சரிபார்த்தனர். கார் தனியார் நிறுவன மேலாளர் ஒருவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அத்துடன் காரின் ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதும் தெரியவந்தது. இதைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
மேற்படி கார் என்னென்ன உபயோகங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இதைப்போலவே போலி பதிவு எண்களுடன் நகருக்குள் வேறு கார்கள் ஓடுகின்றனவா என்பன குறித்து காரின் உரிமையாளரிடம் காவல் துறை விசாரணையை முடுக்கியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications