116வது பிறந்த நாள்-காயிதே மில்லத் நினைவிடத்தில் நாளை ஜெயலலிதா அஞ்சலி
சென்னை: காயிதே மில்லத்தின் 116வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா நாளை மலர்ப் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்பின் 116-வது பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, மலர்ப் போர்வைபோர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்றம், ஜெ.ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி உள்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், அ.தி.மு.க.தொண்டர்களும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும், பெருந்திரளாக கலந்துகொண்டு, காயிதே மில்லத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சியை சிறப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications