ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஒரு குற்றவாளி?

ராம்தேவின் வலதுகரமாக வர்ணிக்கப்படுபவர் இந்த பாலகிருஷ்ணா. இவர் ஜூன் 4ம் தேதி முதல் காணவில்லை. இவர்தான் அரசுடன் ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் கையெழுத்திட்ட கடிதத்தைத்தான் அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டு ராம்தேவ் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
4ம் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் அவர் தலைமறைவாகியுள்ளார்.
ஒப்பந்தப்படி 4ம் தேதி மாலையில் தனது போராட்டத்தை ராம்தேவ் வாபஸ் பெறத் திட்டமிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யாமல் அவர் போராட்டத்தைத் தொடர்ந்ததால்தான் கபில் சிபல் மூலம் ரகசிய ஒப்பந்தத்தை மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட்டது.
இந்த நிலையில் பாலகிருஷ்ணா நேபாளத்தில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்தேவுடன் எப்போதும் உடன் இருக்கும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஒரு நேபாள பிரஜை. அந்த நாட்டில் அவர் ஒரு குற்றவாளி ஆவார். இந்தியாவில் புகலிடம் கோரி தஞ்சமடைந்தவர். இது விசாரிக்கப்பட வேண்டும். எப்படி அவருக்கு இந்திய பாஸ்போர்ட் கிடைத்தது என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
ஆனால் இதை ராம்தேவ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிலர் பாலகிருஷ்ணாவின் பெயரைக் கெடுக்க முயற்சிக்கின்றனர். உண்மையோ, ஆதாரமோ இல்லாமல் அவதூறாகப் பேசுகின்றனர். பாலகிருஷ்ணா பத்திரமாக இருக்கிறார். அவருடைய வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
என்னை அழிப்பதில்தான் மத்திய அரசு கவனத்துடனும், தீவிரமாகவும் உள்ளது. நாட்டை வளப்படுத்துவதை விட என்னை அழிக்கத்தான் அது துடிக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications