ராம்தேவ் விரட்டப்பட்ட விவகாரம்-ஜனாதிபதியிடம் பாஜக புகார்

அத்வானி தலைமையிலான பாஜக மூத்த தலைவர்கள் குழு ராஜ்காட்டில் நடத்தி வந்த சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக் கொண்டு குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இன்று பிற்பகலில் சென்றனர். அங்கு குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர்அத்வானி செய்தியாளர்களிடம் பேசுகையில், சுதந்திர இந்தியாவில் மிகவும் மோசமான ஊழல் அரசு என்ற பெயரை இந்த அரசு பெற்றுள்ளது. உடனடியாக நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டி தற்போது எழுந்துள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க வகை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரை நாங்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டோம்.
மேலும் ஊழல் தொடர்பான பிரச்சினைகளைக் கவனிக்க கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம் என்றார் அத்வானி.
முன்னதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி தலைமையில் டெல்லி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிட வளாகத்தில் பாஜகவினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடந்தது. இரவு முழுவதும் அத்வானி, கத்காரி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும், நூற்றுக்கணக்கான பாஜகவினரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்தியாவின் காட்மதர் என்று கூறப்படும் இந்திரா காந்தியையே எதிர்த்துப் போராடி வென்ற இயக்கம் பாஜக என்பதை காங்கிரஸ் மறந்து விடக் கூடாது.
இதை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திரா காந்திக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்துக் கொடுத்ததை அவர்கள் மறந்து விடக் கூடாது. இவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒட்டுமொத்த நாடும் கோபத்துடன் உள்ளது. போராட்ட மனோபாவத்தில் மக்கள் உள்ளனர்.
பாபா ராம்தேவ் போன்ற ஊழலை எதிர்த்துப் போராடுவோர் மீது இந்த அரசு பிரயோகித்து வரும் வன்முறை, அராஜகத்தைப் பார்த்து மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த அரசு பதவியில் நீடிக்கும் அருகதையை இழந்து விட்டது.
அதேசமயம், பிரிவினையைத் தூண்டி வரும், நாட்டுக்கு எதிராக பேசி வரும் சையத் அலி ஷா கிலானி போன்றோரை தொடர்ந்து சுதந்திரமாக பேச விட்டு வருகிறது இந்த அரசு என்றார் பிரசாத்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications