நெருங்குகிறது உள்ளாட்சித் தேர்தல்-அதிமுகவினர் வசமாகுமா டாஸ்மாக் பார்கள்?
குமரி: தமிழகத்தில் தனியாரிடமிருந்து மதுபான கடைகளை 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அரசுடையாக்கப்பட்டுஅரசே 6 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகளை திறந்தது. மேலும் மதுபான கடைகளை ஓட்டி மதுபானங்களை உட்கார்ந்து குடிக்கும் வண்ணம் பார்களை அமைக்கவும், அதனை தனியாருக்கு ஓப்பந்தம் விடப்பட்டு மொத்த அரசு இயந்திரமும் மதுபான கடை வசூல் மூலம் இயக்கப்பட்டன.
கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவினர் துணையோடு மதுபான பார்களை ஏராளமான திமுகவினர் கைப்பற்றினர். இதுவே அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் வெற்றிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நிலை தற்போதும் உருவாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போது வரும் 22ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸமாக் பார் ஏலம் நடைபெற உள்ளது. தமிழத்தில் உள்ள 6300 மதுபான கடைகளுக்கும் 6300 பார்கள் உண்டு. ஆனால் இதில் சுமார் 1000 பார்கள் வரை பணம்கட்ட முடியாமலும், திறக்கமுடியாமலும் உள்ளதை கழித்து சுமார் 5 ஆயிரம் பார்களுக்கு ஏலம் நடைபெறுகிறது.
அதி்முக ஆட்சி ஏற்பட்டு விட்டதால் பல மாவட்டங்களில் அதிமுகவினர் தேர்தல் முடிவுக்கு பின்னர் பார்கள் ஏலம் எடுப்பது குறித்து தீவிர ஆலோசனையி் ஈடுபட்டுள்ளனர். அதி்முகவின் முக்கிய புள்ளிகளை ஏற்கனவே கடந்த ஆட்சியில் பார் ஏலம் எடுத்து பணம் பார்த்த புள்ளிகள் வலை வீசி வளைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளவர்களும், மாவட்ட,ஓன்றிய, நகர செயலாளர்களும் டாஸ்மாக் பார் ஏலத்தில் கலந்து கொள்ள மும்முரம் காட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், தென்காசி, நெல்லை, ஆலங்குளம், சங்கரன்கோவில், தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை போன்ற பகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தென்காசி, குற்றாலம், சுரண்டை போன்ற பகுதிகளில் முன்ணனி நாளிதழ் நிருபர்களும் மதுபான கடை பாரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆட்சியில் காட்டிய சலுகைகளை இந்த ஆட்சியிலும் பெரும் முயற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது சபாநாயகராக இருந்த இரா. ஆவுடையப்பனின் உதவியாளர் ஒரு திமுக பிரமுகருக்கு மதுபான பார் ஓதுக்க சொல்லி கொடுத்த சிபாரிசு கடித்ததால் சட்டசபையில் அமளி, வெளிநடப்பு போன்றவைகள் அதி்முக எம்எல்ஏக்களால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மதுபான கடை பார் ஏலம் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications