நெல்லையில் அவுட் ஆன பிஎஸ்என்எல் செல்போன் சேவை
நெல்லை: நெல்லலை மாவட்டத்தில் பிஎஸ்என்எல் சேவை திடீரென செயல் இழந்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் வேதனையில் சிக்கினர்.
மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் புத்துணர்ச்சி பெற்று பல்வேறு தொழில்நுட்ப முறைகளை கையாண்டு 2 ஜி, 3 ஜி அளவுக்கு சாதனை படைத்து வந்தாலும் பிஎஸ்என்எல்லில் சேவை பெற்று வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் தனியார் நிறுவனத்தோடு போட்டியிட முடியாமல் திணறுவது நாடறிந்த உண்மை. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செல்போன் சேவையானாலும் சரி, பிராட்பாண்ட் சேவையானாலும் சரி இரண்டுமே பெங்களூரை மையமாக வைத்து தான் இயக்கப்படுகிறது.
அப்படி இருக்கும் சமயம் அடிக்கடி பிராட்பாண்ட் செயலிழந்து போவதும், செல்போன் சேவை முற்றிலும் செயலிழந்து போவதும் தற்போது அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கானோர் பிஎஸ்என்எல் நிறுவன சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வரும் நிலையில் இந்நிறுவனமோ பலமாக இருந்தும் இன்னும் அடிப்படை வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாமல் திணறி வருவது ஊரறிந்த உண்மை. அப்படியிருந்தும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லில் வாடிக்கையாளர்களோ ஏராளமானோர் உள்ளனர்.
நேற்று மாலை 4 மணிமுதல் பிஎஸ்என்எல் செல்போன் சேவை நெல்லை மாவட்டத்தில் முற்றிலும் செயல் இழந்தது. ஏராளமானோர் ரயில் முன்பதிவு உள்ளி்ட்ட சேவைகளை காணமுடியாமலும், தகவல்களை பறிமாற முடியாமலும் திணறிய வண்ணம் இருந்தனர். எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி மின்சாரம் தடை ஏற்படுவது போல் பிஎஸ்என்எல் செல்போன் சேவையும் இருந்ததால் ஆயிரக்கனக்கானோர் பெரும் வேதனையடைந்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications