இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரும்பலூர் அருகே இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மணிமாறன் (25).

தனது தந்தை பெரியசாமி உயிரிழந்ததால் அதற்காக வாரிசு சான்றிதழ் வழங்க கோரி தாலுக்கா அலுவலகத்தில் மணிமாறன் விண்ணப்பித்துள்ளார்.

இறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றால் தனக்கு ரூ 500 தர வேண்டும் என்று கிராம நிர்வாக அதிகாரி தேன்மொழி வற்புறுத்தியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத மணிமாறன், இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அவர்களின் அறிவுரையின் பேரில் இன்று காலை கிராம நிர்வாக அதிகாரி தேன்மொழியிடம் மணிமாறன் ரூ 500 லஞ்சம் கொடுத்த போது அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தேன்மொழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஊழலுக்கு எதிராக எத்தனை அன்னா ஹஸாரேக்கள் வந்தாலும் இந்த லஞ்ச லாவண்யங்கள் குறையப் போவதில்லை. அதிலும் ஆண்களுக்குப் போட்டியாக பெண் அதிகாரிகளும் போட்டி போட்டு கொண்டு லஞ்சம் வாங்குவது அதிர்ச்சியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+