கேரளாவில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க தடை
கொல்லம்: கேரளாவில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்க தடை சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
கேரளாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், பீர் போன்ற மது வகைகளை கேரள மதுபான விற்பனை கழகம் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன.
இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இயஙகுகிறது. கடந்த 2009-2010ம் நிதியாண்டில் கேரளாவில் ரூ.5539.85 கோடிக்கு மது விற்றுள்ளது. 2010-11ம் நிதியாண்டில் இது ரூ.6730.30 கோடியாக அதிகரித்தது.
சமீபகாலமாக கேரளாவில் 14 வயதுக்கு குறைவான சிறுவர்கள் கூட மது குடிக்க தொடங்கியுள்ளனர். நகர்ப்புறங்களில் பெரும்பாலான பார்களில் எவ்வித அச்சமும் இன்றி சிறுவர்கள் மது அருந்தி செல்கின்றனர். எனவே சிறுவர்கள் மதுவுக்கு அடிமையாவதை தடுக்க 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்க கூடாது என்று சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே 18 வயது குறைவானர்களுக்கு மது விற்க கூடாது என சட்டம் உள்ளது. புதிய சட்டத்தை கடுமையாக அமுல்படுத்திட திட்டமிட்டுள்ளது. மது வாங்குபவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என கடை மேலாளருக்கோ, கடை விற்பனையாளருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் அவர்களுக்கு மது கொடுக்க கூடாது. 21 வயது ஆகியிருந்தால் அதற்கான சான்றிதழை மேலாளரிடம் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் மது வழங்கப்படும்.
இதேபோல் பார்கள் இப்போது காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை திறக்கப்படுகிறது. இனிமேல் பார்களை 12 மணி நேரத்திற்கு மேல் திறந்து வைக்கவும் தடை விதிக்கப்படவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications