குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம், அது குடும்பத்தைப் பலப்படுத்தவே உதவும்-கருணாநிதி

சென்னையில் ஒரு திருமண விழாவில் இன்று கலந்து கொண்டார் திமுக தலைவர் கருணாநிதி. வழக்கமாக இந்துப் புராணங்களைப் பழித்தும், இழித்தும் பேசுவது கருணாநிதியின் பாணி. அதேசமயம், தனக்கு தேவை என்று வரும்போது புராணங்களையும், புராண நாயகர்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்வார். அந்த வகையில் இன்று ராமன் குறித்தும் மேற்கோள் காட்டிப் பேசினார் கருணாநிதி. இதே ராமனை, எந்த காலேஜில் படித்தவர் இவர், பொறியாளரா என்றெல்லாம் கருணாநிதி கேட்டிருந்தது நினைவிருக்கலாம்.
திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசுகையில்,
இங்கே பேசிய போது தேர்தலிலே நாம் வெற்றியடையவில்லை என்று சொன்னார்கள். நாம் இப்போது ஆட்சியிலே இல்லை என்று கூட நம்முடைய நண்பர்கள் சிலர் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள். ஆட்சியிலே இல்லாவிட்டாலும், நம்முடைய குறிக்கோளை நாம் இழந்து விடமாட்டோம்.
புராணத்தில், ராமாயணத்தில் கூட 14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலே இல்லை, அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆகவே ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக் களையவும், தடுத்து நிறுத்தவும் நாம் முயல வேண்டும், நம்மால் முடியும். அப்படி முடிகின்ற அந்த காரியத்தை இன்றைய தினம் மணமக்களாக வீற்றிருக்கின்ற அருமைச் செல்வங்கள், பத்மப்பிரிதிகாவும், சஞ்சய் குமாரும் நெஞ்சிலே ஏந்திக் கொண்டு தங்களுடைய குடும்பத்தை நடத்த வேண்டும்.
குடும்பம் நடத்துவதிலே சிக்கல்கள் தோன்றலாம். இங்கே நம்முடைய குஷ்பூ சொன்னதைப் போல சிறு சிறு ஊடல்கள், சிறு சிறு தகராறுகள், பிரச்சினைகள் இவைகள் எல்லாம் குடும்பத்தின் பலத்தை வலுப்படுத்தக் கூடியதாகத் தான் இருக்கும். அப்படி குடும்பத்திற்கு இல்லற வாழ்க்கைக்கு வலு சேர்க்கின்ற வகையிலே அபிப்பிராய பேதங்கள் வந்தால், கருத்து வேறுபாடுகள் வந்தால் அதில் ஒன்றும் தவறில்லை.
அத்தகைய கருத்து வேறுபாடுகள் புதிய புதிய சிந்தனைகளுக்கு அறிவுத் தேடல்களுக்கு இடம் கொடுக்கும் என்பதையும் மறந்து விடாமல் மண மக்களை வாழ்ந்திட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குழுவில் நண்பர்கள் மத்தியில் ஜோக்கர்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில ஜோக்கர்கள் அரசியலிலும், கலைத்துறையிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
அப்படிப்பட்ட ஜோக்கர்கள் யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளிலே எடுத்துக்காட்டாகக் கூட யாராலும் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ் என்று சொல்வதற்கு இப்போது சிலருக்கு தயக்கம் ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் தமிழ் வாழ்க என்று அரசியலில் என்னுடைய நிலையை உருவாக்கிக் கொண்டவன்தான் நான்.
என்னுடைய பதினான்காவது வயதில் தமிழ் வாழ்க என்ற முழக்கத்தோடு, தமிழ்க் கொடியைப் பிடித்து வளர்ந்தவன்-பெரியாரின் நிழலிலே இருந்தவன். அண்ணாவினுடைய கரங்களைப்பிடித்து வளர்ந்தவன்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழ் என்று சொல்லவே பல பேர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் தமிழ் வாழ்ந்தால், இங்கே தம்பி செல்வம் குறிப்பிட்டதைப் போல, தமிழ் இன உணர்வு வளரும்.
தமிழ் இன உணர்வு வளர்ந்தால், திராவிட உணர்வு செழிக்கும். இந்த இரண்டு உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லாமல் செய்ய வேண்டுமென்று ஒருசாரார் முயன்று வருகின்ற நேரத்தில் ஆத்திகத்திலே பற்று கொண்டவர்கள் கூட, நாத்திகராக தங்களைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் கூட,
தமிழ் வாழவும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரம் இவைகள் வென்றிடவும், பாடுபட வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றது.
நான் அத்தகைய அழைப்பை தமிழர்கள் என்று யார் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இது போன்ற விழாக்களில் விடுக்க விரும்புகிறேன். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய கலாச்சாரம் வாழும். தமிழர்களுடைய கலாச்சாரம் வாழ்ந்தால்தான் தமிழர்களுடைய தன்மானம் வாழும். தன்மானம் பாதுகாக்கப்படும்.
அப்படிப்பட்ட தன்மானத்தைப் பாதுகாக்க, நம்முடைய இன உணர்வுகளுக்கு இடம் அளித்து அந்த இன உணர்வுக்கு வெற்றியைத் தேட நாமெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications