ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா, ராம்தேவுக்கு எதிராக காங். பிரசார போராட்டம்
கொல்கத்தா: ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹஸாரே மற்றும் ராம்தேவ் ஆகியோருக்கு எதிராக புதிய பிரசாரப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இவர்கள் இருவரையும் எதிர்த்து இந்தப் போராட்டம் அமையும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உலக மகா ஊழல்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தற்போது ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நசுக்கவும், ஒன்றுமில்லாமல் போகச் செய்யவும், அதில் ஈடுபட்டிருப்போர் மீது அவதூறை சுமத்தவும் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
ராம்தேவை விமான நிலையம் வரை போய் வரவேற்று கூட்டி வந்து பேச்சு நடத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தப் புதிய போராட்டம் குறித்து நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது ராம்தேவை மட்டுமல்லாமல் காந்தியவாதி அன்னாவையும் கடுமையாக விமர்சித்தார் பிரணாப் முகர்ஜி. அப்போது அவர் கூறுகையில், பாஜக ஊழலுக்காக போராடுவதாக கூறி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. எங்களுக்கும் ஊழலை ஒழிப்பதில் அக்கறை உள்ளது. நாங்களும் ஊழலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரசின் நடவடிக்கைகளை விளக்கவும், பாஜக போன்றோரின் விஷமப் பிரசாரத்தை முறியடிக்கவும் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய பிரசார போராட்டம் நடத்தப்படும்.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பாஜக படு தோல்வியைச் சந்தித்தது. இதிலிருந்து மக்களை திசை திருப்பவும், மறைமுகமாக பிறருடைய ஆதரவின் பலனை தாங்கள் அடையும் முயற்சியாகத்தான் அன்னா ஹஸாரே, ராம்தேவ் போன்றோருக்கு ஆதரவாக நடப்பதாக காட்டிக் கொள்கிறது பாஜக.
இதன் பொருட்டே அது இவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயலாகும்.
அன்னா ஹஸாரே, ராம்தேவ் போன்றோரின் செயல்களும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, சட்ட விரோதமானவை. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்குத்தான் அரசியல் சட்டம் அதிகாரத்தை அளித்துள்ளது. மாறாக, 5000 பேர் கூடி, 10,000 பேர் கூடி இதைச் செய், அதைச் செய் என்று அரசுக்கு கட்டளையிட முடியாது. இப்படிச் சொல்வது ஜனநாயகத்தை பலவீனமாக்கி விடும் என்றார் பிரணாப் முகர்ஜி.
பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஹஸாரே, ராம்தேவ் மற்றும் பாஜகவுக்கு எதிரான போராட்டமாக பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications