தனியார் பள்ளி கல்விக் கட்டணக் குழு தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜினாமா?

தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் இந்தக் குழுவை கடந்த 07.12.2009ம் தேதி திமுக அரசு அமைத்தது. இந்தக் குழு தீவிர ஆலோசனை நடத்தி தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயத்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இந்தக் கட்டணத்தை எதிர்த்து 6,400 பள்ளிகள் இந்தக் குழுவிடமே மேல்முறையீடு செய்தன.
ஆனால், 10 மாதங்களே இந்தப் பதவியில் இருந்த நீதிபதி கோவிந்தராஜன் தனது உடல் நலன் கருதி குழுத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியனை இந்தக் குழுவின் தலைவராக நியமித்து தமிழக அரசு நியமித்தது.
கல்விக் கட்டணத்தை எதிர்த்து அப்பீல் செய்த 6,400 பள்ளிகளிடம் இவர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தனியார் பள்ளிகளுக்கான திருத்திய கட்டணங்கள் தொடர்பான உத்தரவை எழுதிய பின் நீதிபதி கோன்விந்தராஜன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகத் தெரிகிறது.
தனது அரசு காரையும் அவர் திருப்பி அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.
இதையடுத்து நேற்று காலையிலேயே நீதிபதி ரவிராஜபாண்டியன் அறைக்கு முன் இருந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டுவிட்டது.
ஆனால், நீதிபதியின் ராஜினாமா குறித்து அரசோ, அவரோ, அதிகாரிகளோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
நீதிபதி ரவிராஜபாண்டியனுக்கு மேலும் ஓர் ஆண்டுக்கு மேல் பதவிக் காலம் உள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டதால் அதிமுக ஆட்சியில் அவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications