மதுரை அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் சுப்பிரமணி (65) போலீசிடம் சிக்கினார். விசாரணையில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி கற்பகம் என்ற பெண்ணிடம் ஆண் குழந்தை திருடி தருவதாக கூறி, ரூ.7 ஆயிரம் வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அமுதவல்லி என்பவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
25 ஆண்டுகளாக திருட்டு
குழந்தை கடத்தல் பற்றி சுப்பிரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் குழந்தைகளை திருடி விற்று வந்து உள்ளேன். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளை வார்டில் இருந்து திருடி விற்றுள்ளேன்.
என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தையை திருடி கூடல்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கு விற்றேன். சமீபத்தில் அந்த டாக்டர் இறந்து விட்டார். அதன்பின் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
யார் யார் சிக்குவார்கள் ?
புரோக்கர் சுப்பிரமணியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாக்குமூலத்தையடுத்து குழந்தைகளை வாங்கியவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
புரோக்கர்கள் ஓட்டம்
போலீசார் தரப்பில் கூறும் போது, இவர் ஒரு நபராக இத்தனை குழந்தைகளை கடத்தி விற்று இருக்க முடியாது. இவருக்கு உதவியவர்கள் யார், யார்? பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர். இதற்கிடையில், குழந்தைகள் திருட்டை ஒழிக்கவும், புரோக்கர்களை தடுக்கவும் ஆயுதப்படை போலீசார் 10 பேர் தினமும் மதுரை பெரிய மருத்துவமனையில் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications