2ஜி ஊழல்-தயாநிதி மாறனிடம் விரைவில் சிபிஐ விசாரணை?

தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனம் தொடர்பாக ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தயாநிதி மாறன் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை முதல் வாரத்தில் தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, தயாநிதி மாறன் தன்னை நிர்பந்தப்படுத்தி மலேசியாவைச் சேர்ந்த ஒருவரின் நிறுவனத்துக்குப் பங்குகளை விற்க வைத்ததாக ஏர்-செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தயாநிதி மாறன் தவிர அவரது அண்ணனும் சன் டிவி அதிபருமான கலாநிதி மாறனும் சேர்ந்து தன்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார் சிவசங்கரன்.
சிவசங்கரனின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டுள்ள சிபிஐ பலவித விசாரணைகளுக்குப் பின்னர் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications