சொத்துக்குவிப்பு வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்
நெல்லை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
நெல்லை கோர்ட்டில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில் துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். தற்போது நெல்லை தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக நயினார் நாகேந்திரன் சொத்து குவித்தது குறித்து நெல்லை விஜிலன்ஸ் போலீசார் கடந்த 2006ம்ஆண்டு விசாரணை நடத்தினர்.
வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரத்து 97 ரூபாய்க்கு தங்கநகைகள், நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை நயினார் நாகேந்திரன் வாங்கியது விஜிலன்ஸ் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன், அவர் மனைவி சந்திரா, மைத்துனர்கள் வள்ளிக்கண்ணு, சுப்பிரமணியன், நடராஜன், நவராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 145 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நெல்லை சி.ஜே.எம். கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை நெல்லை சி.ஜே.எம். கோர்ட்டில் நடந்தது. நயினார் நாகேந்திரன் உட்பட ஆறு பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 6ம்தேதிக்கு நீதிபதி நசீர்அகமது ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications