நன்றி சொல்வதற்காக ரஷ்யா போகிறார் ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

Rajapakse
கொழும்பு: இலங்கையில் நடந்த இனவெறிப் படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக கூறி இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், எதிர்காலத்திலு் இந்த ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவும் ரஷ்யாவுக்குப் போகிறார் ராஜபக்சே.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ராஜபக்சே செல்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் தன் மீதான இனவெறி இனப்படுகொலை குற்றச்சாட்டிலிருந்து காக்க ரஷ்யா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி கூறுவதற்காகவும், இந்த ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவுமே அங்கு ராஜபக்சே ஓடுவதாக கூறப்படுகிறது.

இந்த பொருளாதார மாநாட்டில் சீனா, ஸ்பெயின உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொள்கின்றன. ராஜபக்சேவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸும் உடன் போகிறார்.

இலங்கையின் போர்க்குற்றத்தை தோலுரித்துக் காட்டியுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவுடன் சேர்ந்து ரஷ்யாவும் தோள் கொடுத்து முட்டுக்கொடுத்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+