திமுகவிலிருந்து தாவிய அசோகனுக்கு டெல்லி சிறப்பு பிரநிதி பதவி
கரூர்: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதியாக திருவாரூர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
கடந்த 2006 ம் ஆண்டு திமுகவில் சட்ட சபை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததாதல் அக் கட்சிக்கு குட்பை சொல்லிவி்ட்டு அதிமுகவில் இணைந்தவர் அசோகன்.
அதிமுகவில் அப்போது, அவருக்கு தலைமைக் கழக பேச்சாளர் பதவி மட்டுமே கிடைத்தது. கடந்த 6 வருடமாகவே இப் பதவியில் மட்டுமே அமைதியாக இருந்து கட்சிப் பணியாறி வந்தார்.
நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் இவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அதை மனதில் கொள்ளாமல் தேர்தல் பணியாற்றினார் அசோகன்.
இந்த நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதியாக அசோகனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அரசு சார்பில் மத்திய அரசை தொடர்பு கொள்ள டெல்லி பிரநிதி ஒருவரை மாநில அரசு நியமிப்பது வழக்கம்.
மிகவும் உயர்ந்த பதவியான இந்த பதவியை திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த அசோகனுக்கு வழங்கியதன் மூலம் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், மரியாதையும், உயர்ந்த பதவியும் வழங்கப்படும் என இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா சிக்னல் கொடுத்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அசோகனைத் தொடர்ந்து திமுகவில் இருந்து மேலும் பல முக்கிய நிர்வாகிகள் விலகி வரக் கூடும் என்றும் அதிமுகவினர் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளது.
-
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications