ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தடியடி நடத்தவில்லை-டெல்லி போலீஸ்

ஊழலுக்கு எதிரான காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜூன் 4ம் தேதி தொடங்கினார் ராம்தேவ். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அன்று நள்ளிரவில் அங்கு குவிந்த டெல்லி போலீஸார் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி ராம்தேவை அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி அடுத்த நாள் ஹரித்வாரில் கொண்டு போய் விட்டு விட்டனர்.
மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதாலும், கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பிரயோகித்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அது கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் டெல்லி காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் டெல்லி காவல்துறை நடக்கவில்லை. அன்று இரவு நடந்த பெரும் குழப்பத்திற்கும், வன்முறைக்கும் பாபா ராம்தேவ்தான் காரணம்.
போலீஸாருடன் வராமல், கூட்டத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றார் ராம்தேவ். இதனால்தான் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் ராம்தேவின் ஆதரவாளர்கள் கற்களையும், பூத்தொட்டிகளையும் எடுத்து போலீஸார் மீது வீசித் தாக்கினர். அதைத் தடுக்க போலீஸார் முயன்றபோது அவர்களைத் தாக்கவும் முயன்றனர். இருப்பினும் கூட போலீஸார் தடியடி நடத்தவில்லை. பொறுமை காத்தனர்.
முகாமின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் வன்முறையில் 39 பொதுமக்கள், 23 போலீஸார் என 72 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications