ஸ்பெக்ட்ரம்: யுனிடெக் நிறுவனத்தின் ரூ.5,000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு

இந்த ஊழலால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத்துறை கூறியுள்ளது. ஸ்பெக்ட்ரத்தை வேண்டிய நிறுவனங்களுக்கு, மிகக் குறைந்த விலையில் தருவதற்காக ரூ. 30,000 கோடி வரை பணம் கைமாறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் பெயர்கள் இடம் பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நி்ர்வாக அதிகாரி சரத்குமார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர யுனிடெக் வயர்லஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாம் (இப்போது எடில்சாட் டிபி) நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்களை முறைகேடாகப் பெற்ற இந்த நிறுவனங்கள் அவற்றை விற்று கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக யுனிடெக் நிறுவனம் தான் இதில் மிக அதிகமான லாபம் சம்பாதித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை வாங்கியதும் இந்த நிறுவனம் தனது 66.5 சதவீத பங்குகளை நார்வேயின் டெலிநார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் மூலம் ரூ. 6,135 கோடி லாபம் ஈட்டியது.
முறைகேடாக லாபம் ஈட்டிய இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணிகளை அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளது. யுனிடெக் வயர்லஸ் (தமிழ்நாடு பிரிவின்) ரூ.5,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கப் போவதாக அந்த நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரி்வு நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதன் துணை நிறுவனமான சினியுக் பிலிம்ஸ் (இதன்மூலம் தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு டிபி ரியாலிட்டி நிறுவனம் ரூ. 214 கோடியைத் தந்தது) ஆகிய நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கப் பிரிவு முடக்கும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications