ஆந்திராவிலிருந்து சென்னைக்கு 2 நாளில் கிருஷ்ணா நீர் திறப்பு
சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 2 நாட்களில் கிருஷ்ணா நதி நீர் சென்னை நகருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும். இந்த நீர் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த ஆண்டு சென்னைக்கு 7.01 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரைத் தான் ஆந்திரா வழங்கியது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் இந்த நீர் கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னை வருகிறது. கண்டலேறு அணையில் 6.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் சென்னைக்கு தண்ணீரை விட முடியும்.
இப்போது அந்த அணையில் 35 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்தது. இது குறித்து வலியுறுத்த தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா சென்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது கிருஷ்ணாகால் வாயில் தண்ணீர் திறக்கும் தேதி முடிவாகிறது. இன்னும் 2 நாட்களில் கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு திறந்து விடப்படும் என்று தெரிகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 5,407 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது அக்டோபர் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க போதுமானது. கிருஷ்ணா நீரும் வந்துவிட்டால் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு வராது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications