ஸ்ரீரங்கம் அதிமுகவினருக்கு மோதிரங்கள் வழங்கிய ஜெயலலிதா

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திருச்சி வந்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மற்றும் ஒன்றியம் வாரியாக அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த முதல் மூன்று வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த அதிமுக பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் நேரில் வரவழைத்து, அவர்களுக்கு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை பவுன் தங்க மோதிரங்களையும் உறுப்பினர்களுக்கு கைக் கடிகாரங்களையும் பரிசாக வழங்கி பாராட்டினார்.
இதன்படி ஸ்ரீரங்கம் பகுதியில் முதலிடத்தை பெற்ற 64/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளர் ஆர்.லட்சுமிநாராயணன் ஒரு பவுன் தங்க மோதிரத்தையும், இரண்டாவது இடத்தைப் பெற்ற 68/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், ஸ்ரீரங்கம் பகுதி வட்ட பாகச் செயலருமான முத்துகிருஷ்ணன் முக்கால் பவுன் தங்க மோதிரத்தையும்,
மூன்றாவது இடத்தைப் பெற்ற 70/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், ஸ்ரீரங்கம் பகுதி 2வது வட்டச் செயலருமான திருவேங்கடன் அரை பவுன் தங்க மோதிரத்தையும், மேற்படி வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த இதர உறுப்பினர்கள் கைக்கடிகாரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மணிகண்டம் ஒன்றியத்தில் முதலிடத்தை பெற்ற 186 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், தாயனூர் ஊராட்சி அதிமுக செயலருமான இன்பராஜ் ஒரு பவுன் தங்க மோதிரத்தையும், இரண்டாவது இடத்தைப் பெற்ற 155 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், அதவத்தூர் ஊராட்சி கழகச் செயலாளருமான முத்துவீரன் முக்கால் பவுன் தங்க மோதிரத்தையும், மூன்றாவது இடத்தைப் பெற்ற 156 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், பள்ளக்காடு கிளைச் செயலருமான திருமூர்த்தி அரை பவுன் தங்க மோதிரத்தையும், மேற்படி வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த இதர உறுப்பினர்கள் கைக்கடிகாரங்களையும் பெற்றுக் கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications