புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் 1432 பேர் நீக்கப்பட்டதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் 1432 பேரை முதல்வர் ரங்கசாமி அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளார். இவர்கள் கடந்த ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறி அவர்களை ரங்கசாமி டிஸ்மிஸ் செய்துள்ளார்.
இதையடுத்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக இன்று ஆயிரக்கணக்கானோர் சட்டசபை முன்பு குவிந்து முற்றுகைப் போராட்டத்தில் குதித்தனர். சட்டசபையின் அனைத்து வாயில்களையும் மூடி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் சாலை மறியலிலும் நூற்றுக்கணக்கானார் ஈடுபட்டுனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபை வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
அனைவரையும் கலைந்து போகுமாறு போலீஸார் கூறியும் அவர்கள் கலைந்து போகவில்லை. இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications