மதுரை மேயர் தேன்மொழிக்கு முன்ஜாமீன் வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற பெஞ்ச்
மதுரை: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தொடர்ந்துள்ள வழக்கில் மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதனுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
திமுகவைச் சேர்ந்த மேயர் தேன்மொழி உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சமீபத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் மீது ஜெயராமன் என்ற வழக்கறிஞர் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மதிச்சியம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை சுந்தரராஜன் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். அவர் மீது இதுவரை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக சுந்தரராஜனிடம் கேட்டால் அவர் மிரட்டுகிறார். மேலும் உள்ள நிலத்தையும் ஆக்கிரமிப்பேன் என்று கூறுகிறார். எனவே இதுகுறித்து மதுரை மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து தேன்மொழி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி தேன்மொழி உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமனறக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், தேன்மொழிக்கு இன்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications