நில அபகரிப்பு: கோவை திமுக நிர்வாகி கைது-மேலும் சிலர் கைது?
கோவை: நில அபகரிப்பு வழக்கில் கோவை திமுக துணைச் செயலாளர் ஆனந்தன் இன்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் சில திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.
கோவையில் கடந்த 5 ஆண்டு காலமாக ஏராளமான நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. இது குறி்த்து விசாரிக்க கோவை போலீசார் நில அபகரிப்பு மீட்பு படை ஒன்றை அமைத்தனர்.
இந்தப் படை நில அபகரிப்பில் ஈடுபட்ட திமுக பிரமுகர்களை ரகசியமாக கண்காணித்து வந்தது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களில் கோவை மாவட்ட ஊராட்சி துணை தலைவரும், மாவட்ட திமுக துணைச் செயலாளருமான ஆனந்தன் மீதுள்ள நில அபகரிப்பு புகார் நிலுவையில் இருந்தது.
கடந்த 6 மாதத்திற்கு முன் தொண்டாமுத்தூர் ஏ.டி.டி. காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீசர்மா என்பவர் ஆனந்தன் தன்னிடம் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக புகார் கொடுத்தார். ஆட்சி மாறிய பிறகு மீண்டும் அந்த புகாரை நினைவு கூர்ந்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தனை கைது செய்ய இன்று அதிகாலை அவரது வீட்டிற்குச் சென்றனர். போலீசாரைக் கண்டவுடன் தப்பிக்க முயன்ற அவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரிக்கப்பட்டது.
விசாரணையில் ஆனந்தன் கடந்த 6 மாதத்திற்கு முன் ஸ்ரீசர்மாவிடம் ரூ. 25 லட்சத்திற்கு 2 பிளாட்டுகளை விற்றுவிட்டு, பின் அவரை மிரட்டி அதை அபகரித்து வேறொருவருக்கு விற்றது தெரியவந்தது.
நில அபகரிப்பு வழக்கில் மேலும் சில திமுக பிரமுகர்கள் கைதாகலாம் என்பதால் பிரமுகர்கள் கதி கலங்கிப் போய் இருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications