செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்: ரங்கசாமிக்கு பாஜக கோரிக்கை
சென்னை: புதுவை முதல்வர் ரங்கசாமி தனது ஆட்சிக்கு உயிர் கொடுப்பதற்காக செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்துவிட வேண்டாம் என்று பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினரும், மூத்த தலைவருமான இல. கணேசன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக சார்பில் ஊழல் ஒழிப்பு மற்றும் கறுப்பு பணம் மீட்பு குறித்த பொதுக் கூட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட இல. கணேசன் பேசுகையில், "ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ரங்கசாமி தான் வெற்றி பெற்ற இரண்டில் ஒரு இடத்தில் பதவியை ராஜினாமா செய்தார். 14 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு அவரால் எவ்வாறு தனித்து ஆட்சியமைக்க முடிந்தது?
நான் இங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும்போதே என். ஆர். காங்கிரஸுக்கு வாக்களித்து ஏமாறாதீர்கள் என்று கூறினேன்.
நான் அப்போது யூகித்து கூறியிருந்தாலும் காங்கிரஸார்களின் புத்தி எனக்கு நன்கு தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை கிளப்பிவிட்டு ஓட்டு வாங்கிய ரங்கசாமி தற்போது முதல்வரான பிறகு தனது அலுவலகத்தில் சோனியா காந்தியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார். இப்பொழுதுதான் மக்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
முlல்வர் ரங்கசாமி டெல்லி சென்றபோது பிரதமரைச் சந்திக்கவில்லை. ஆனால் சோனியா காந்தியை மட்டும் சந்தித்துவிட்டு வந்தார். பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டெல்லி செல்கையில் நிர்வாகக் காரணங்களுக்காக தவறாது பிரதமரை சந்தி்க்கிறார். ரங்கசாமி சோனியாவை மட்டும் சந்தித்தது ஏன்?
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி தனது ஆட்சிக்கு உயிர் கொடுக்க விரும்பி செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்துவிட வேண்டாம்," என்று அவரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications