கடல் அலை ஓய்ந்தாலும் மக்களுக்கான மதிமுக போராட்டம் ஓயாது! - வைகோ

மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
அவர் கூறுகையில், "விலை வாசி உயர்வு மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்திருக்கிறது. இவர்கள் உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைந்திருந்த காலத்தில் கூட இங்கு விலைவாசியை குறைத்தது இல்லை.
இப்போதும் அதே காரணத்தைதான் சொல்கிறார்கள். கச்சா எண்ணை உயர்ந்ததால் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியதாக சொல்லுகிறார்கள்.
ஆனால் இவர்களுடைய நோக்கம் பெரு முதலாளிகளும், தனியார் எண்ணை நிறுவனங்களும், லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே துணை போகிறார்கள்.
இன்னும் சிலர் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால், இந்த விலையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பதே மதிமுகவின் கோரிக்கை.
இதனால் நடுத்தர மக்களும் தினக்கூலியாக உழைப்பவர்களூம், பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற மாநிலங்களில் விலைவாசியை கட்டுப்படுத்தியை அரசுகள் போல் தமிழகத்திலும் செய்வார்கள் என்று நம்புகிறோம்.
கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது. தமிழக மக்களுக்கு எந்த பிரச்சனை நடந்தாலும் அங்கு மதிமுக தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழக மக்களுக்காக மதிமுக கடைசிவரை போராடிக்கொண்டே இருக்கும்"" என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications