கேரள மாணவி பலாத்கார வழக்கில் 45 பேர் கைது: அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு
கொல்லம்: கேரளாவில் 14 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மாணவி அடையாளம் காட்டுவதற்காக அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குமரி கான்டிராக்டர் மணிகண்டன், கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ், கோவை மின் ஊழியர் முருகேசன், எர்ணாகுளம் புத்தன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் எல்தோ மாத்யூ, இவருடைய கார் டிரைவர் ஸ்வராஜ், ஆலுவா பகுதியைச் சேர்ந்த பெண் புரோக்கர் லில்லி உள்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரள மாநில மூவாற்றுபுலா பகுதியைச் சேர்ந்த முகமது சாலி, ஏழூர் பகுதியைச் சேர்ந்த பீரான் ஆகியோரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பீரான் நகைக்கடை அதிபர். இதன்மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 45-க உயர்ந்துள்ளது. இன்னும் 20 பேர் வரை கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
அவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குமரி மாவட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமறைவாக இருக்கிறார். இவரை பிடிக்க தமிழகத்தில் 2 கேரளா தனிப்படைகள் முகாமிட்டுள்ளன.
மாணவியின் உடல் நிலை நன்றாக இருப்பதால் அவரிடம் விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான சிலரை நேரடியாகவும், சிலரை போட்டோக்கள் மூலமும் மாணவி அடையாளம் காட்டி இருக்கிறார். எனவே கைதான அனைவரையும் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ஆலுவா நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications