பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த மதிமுக நிர்வாகி கைது
கோவை: கோவை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த மதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுசீலா. இவர் நேற்று முன்தினம் இரவு போலீசாருடன் தொண்டாமுத்தூர் கெம்பனூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது முத்திப்பாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மடக்கி போலீசார் விசாரித்தனர். உடனே அவர் மதிமுக மாவட்ட துணை செயலாளர் கெம்பனூர் கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கதிரவன் மற்றும் அவரது உதவியாளர்கள் முருகேசன், சிவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுசீலாவிடம் கதிரவன் வாக்குவாதம் செய்தார். மேலும் சுசீலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.
துணை சூப்பிரண்டு சண்முகவேல், இன்ஸ்பெக்டர் துரைசுந்தரம் ஆகியோருக்கு இது குறி்த்து சுசீலா தகவல் தெரிவித்தார்.
துணை சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மதிமுக துணை செயலாளர் கெம்பனூர் கதிரவன், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த துரைசாமி மற்றும் முருகேசன், சிவராஜ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் கதிரவன், துரைசாமி, முருகேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் சிவராஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications