தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: சரக்கு போக்கவரத்து பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் டோல்கேட்டை அகற்றக் கோரி லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 800 லாரிகள் ஓடவில்லை.
தூத்துக்குடி-மதுரை இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தூத்துக்குடி மாநகரையொட்டி சுங்கவரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் செயல்படத் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் லாரி உரிமையாளர்கள் சாலைப் பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பு வரிவசூலிக்கக் கூடாது என்றும், வரி வசூல் மையம் மாநகருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அதனை மாற்ற வேண்டும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உதவி கலெக்டர் சஜ்ஜன் சிங் தலைமையில் இன்று லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பேசிய உதவி கலெக்டர் லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடம் தூத்துக்குடி சுங்கவரி வசூல் மையம் அருகே உள்ளது. அந்த இடத்தில் தனியாக சாலை அமைத்து அதன் வழியாக லாரிகள் மற்ற வாகனங்கள் சென்று வர அனுமதிப்பது, சுங்கவரி வசூல் மையத்தை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 800 லாரிகள் ஓடவில்லை. இதன் காரணமாக சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications