வாஞ்சிநாதன் மணிமண்டபத்தை பார்வையிட வந்தபோது பறிபோன அமைச்சர் பதவி!

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேய ஆட்சி தலைவர் ஆஷ்துரையை சுட்டு கொன்று விட்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் தானும் சுட்டு களச்சாவு அடைந்தவர் வீரவாஞ்சிநாதன்.
இவரது தியாகத்தை போற்றும வகையில் அப்போதைய முதல்வர் காமராஜர் செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதன்பின் இத்திட்டம் சுமார் 40 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு கடந்த தி்முக ஆட்சியில் மணிமண்டபம் கட்ட ரூ.25லட்சம் நிதி ஓதுக்கீட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்நிலையில் அக்கட்டிடம் கட்டும் பணி பூங்கா வாளத்தில் தொடங்கி கிடப்பில் போடப்பட்டது.
அதனை நேற்று தமிழக செய்தி துறை அமைச்சர் செந்தமிழன், சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா, விளையாட்டுதுறை அமைச்சர் கருப்பசாமி, ஆகியோர் மதியம் 2 மணி அளவில் வந்து பார்வையிட்டு திரும்பினர்.
வழியில் இசக்கி சுப்பையா பதவி பறிப்புச் செய்தி அவரை வந்து சேர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இசக்கி சுப்பையாவிடமிருந்து பறிக்கப்பட்ட சட்டத்துறை அவருடன் நேற்று விழாவுக்கு வந்த செந்தமிழனிடம் கூடுதல் பொறுப்பாக தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications