தாய்லாந்திலிருந்து விரட்டப்பட்ட தக்ஷின் சினவத்ராவின் தங்கை ஆட்சியைப் பிடித்து பிரதமரானார்

தாய்லாந்தில் பிரதமராக இருந்து வந்தவர் தக்ஷன் சினவத்ரா. அவருக்கு எதிராக ராணுவத்தின் உதவியுடன் புரட்சி வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் சினவத்ரா. ஆனால் அதன் பின்னரும் தாய்லாந்தில் அமைதி நிலவவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக பெரும் அமளியில் தவித்து வந்த தாய்லாந்தில் இதுவரை 6 பிரதமர்கள் மாறி விட்டனர்.
இந்த நிலையில் அந்த நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சினவத்ராவின் இளைய தங்கையான யிங்லுக் போட்டியிட்டார். 44 வயதான யிங்லுக் தலைமையிலான கட்சிக்கு தேர்தலில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து யிங்லுக் பிரதமராக பொறுப்பேற்கிறார். தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
இவர் தலைமை தாங்கிய பியூ தாய் அதாவது தாய் மக்களுக்காக என்ற கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவர் தக்ஷின் சினவத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
யிங்லுக் இதுவரை எந்த அரசுப் பொறுப்பையும் வகித்ததில்லை என்பதால் அவர் எப்படி தாய்லாந்து நாட்டை நிர்வகிக்கப் போகிறார் என்று சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் தாய்லாந்து மக்கள் குறிப்பாக பெண்கள் யிங்லுக்கின் திறமையைப் போற்றுகின்றனர். அவர் மிகச் சிறந்த நிர்வாகி, சிறப்பான ஆட்சியை அவர் கொடுப்பார் என்று புகழாரம் சூட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications