தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட வெப்பசலனத்தின் காரணமாக இந்த மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று தமிழகம் முழுவதும் வெயில் சற்று குறைவாகவே இருந்தது. பெருமாபாலான ஊர்களில் 91 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகலில் ஒரு சில பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்துள்ளது.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 50 மி.மீ. மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 40 மி.மீ. மழையும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கத்தில் 30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை, தேன்கனிக்கோட்டை, அருப்புக்கோட்டையில் 20 மில்லி மீட்டர், காஞ்சிபுரம், தாம்பரம், திருத்தணி, பூந்தமல்லி, சோழவரம், கொரட்டூர், பூண்டி, செங்குன்றம், தாமரைப்பாக்கம், திருக்கோவிலூர் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வானம் மேகமூட்டமாகக் காணப்படும். வெப்பசலனத்தால அடுத்த 48 மணி நேரத்திற்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையிலும் இதே வானிலை நீடிக்கும். நகரில் அதிகபட்சமாக 96 டிகிரி வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications