2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு-கனிமொழி, ராசா ஆஜர்-ஜூலை 2வது வாரத்தில் 3வது குற்றப்பத்திரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நேற்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேர் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் 3வது குற்றப்பத்திரிக்கை ஜூலை 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை மூடப்பட்டிருந்தன. நேற்று இவை திறக்கப்பட்டன.
இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நீதிபதி ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராசா, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதுவரை இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஜூலை 2வது வாரத்தில் 3வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது.












Click it and Unblock the Notifications