மேற்கு வங்கம்: தந்தை, அண்ணனுக்கு உறுப்பு தானம் செய்ய சிறுமி தற்கொலை
நடியா: மேற்கு வங்கத்தில் தந்தை மற்றும் சகோதரனுக்கு தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்காக ஒரு சிறுமி தற்கொலை செய்துகொண்டாள். தனது உறுப்புகளை அவர்களுக்கு பொருத்துமாறு கடிதம் எழுதி வைத்துள்ளாள்.
மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா பகுதியைச் சேர்ந்தவர் மிருதுல் சர்கார். கூலித் தொழிலாளி. இவருக்கு மோனோ ஜித் (14) என்ற மகனும், மம்பி சர்கார் (11) என்ற மகளும் உள்ளனர்.
தான் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகள் மிருதல் சர்கார் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவருக்கு கண் பார்வை மங்கத் துவங்கியது. மருத்துவரை அணுகியபோது கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில் அவரது மகன் மோனோ ஜித்தின் சிறுநீரகம் ஒன்று பழுதடைந்தது. இன்னொன்றும் வேகமாகப் பழுதடைந்து வருகிறது. அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றாட வாழ்க்கையை நடத்தவே கஷ்டப்படும் மிருதுல் சர்காரால் இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கும் பணம் திரட்ட முடியாது. இதை உணர்ந்த அவரது மகள் மம்பி தந்தைக்கு கண்ணும், சகோதரனுக்கு சிறுநீரகமும் கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள். உடல் உறுப்பு தானம் பற்றி அறிந்திருந்த அவள் சட்டென்று ஒரு முடிவு எடுத்தாள்.
வீட்டில் தனியாக இருந்த டிம்பி தனது கண்ணை தந்தைக்கும், சிறுநீரகத்தை சகோதரனுக்கும் பொருத்துமாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.
வீணான உயிர்த் தியாகம்!
சிறுமி திடீர் என்று தற்கொலை செய்து கொண்டது அவள் குடும்பத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. அவர்கள் சிறுமியின் உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்து தான் அவள் எழுதிய கடிதத்தைப் பார்த்து சோகத்தில் மூழ்கினர். மொத்தத்தில் சிறுமி செய்த உயிர்த் தியாகம் யாருக்குமே பலன் இல்லாமல் அநியாயமயாக அவளது உயிரை மட்டும் பறித்துக் கொண்டு வீணாய்ப் போய் விட்டது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications