சிறுவன் தில்ஷனைக் கொன்ற ராணுவத்தினரைக் கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: சென்னை தீவுத் திடல் ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் 13 வயது சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீவுத் திடலில் உள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் பாதாம் பழங்களை எடுக்கச் சென்ற தில்ஷன் என்ற 13 வயது சிறுவனை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் குற்றவாளியைக் கைது செய்ய விடாமல் ராணுவத் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீஸார் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் நடந்து 2 நாட்களைத் தாண்டி விட்ட நிலையில் சுட்டது யார் என்பது தெரியாமல் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபமும், அதிருப்தியும் நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழக மக்கள் உரிமைக் கழக தலைவர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சென்னை ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில தில்ஷான் (என்ற சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு காரணமான நபரை கைது செய்ய மாநில போலீசார் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். ருப்பினும், ராணுவ அதிகாரிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.
சிறுவனின் இறப்பு சான்றிதழில் குண்டு காயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் துப்பாக்கியால் சுட்டதால் மாணவன் உயிரிழந்ததும், ராணுவக் குடியிருப்பு வளாகத்திலேயே சிறுவன் இறந்திருப்பதும் தெளிவாகிறது.
அப்பாவி சிறுவன் ராணுவக்குடியிருப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல். நாட்டை காக்க வேண்டிய ராணுவ வீரர்கள் குடியிருப்பில் ஒரு சிறுவனின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.
இதுபோன்ற மோசமான சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்யத் தவறியதும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க ராணுவ அதிகாரிகள் தவறியதும் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.
ஆகவே, சிறுவனின் சாவுக்கு காரணமான ராணுவ வீரரை உடனடியாக கைது செய்யும் படி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications